திருப்பூர் மாநகராட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்ட இறந்த கோழிகளின் 200 கிலோ இறைச்சி பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ எடையுள்ள இறந்த கோழிகளின் இறைச்சி மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ எடையுள்ள இறந்த கோழிகளின் இறைச்சியை  மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உத்தரவின் பேரில், மாநகர சுகாதார நகர் நல அலுவலர் பூபதி தலைமையில் பல்வேறு அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், 49-வது வார்டு பகுதியான இந்திரா நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தனியார் ஒருவருக்குச் சொந்தமான குடோனில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி நின்றது குறித்து ஆய்வு செய்தனர். 



அப்போது, பல ஐஸ் பெட்டிகளில் இறந்த கோழி இறைச்சிகளை, தள்ளு வண்டி மற்றும் ஓட்டல் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பதப்படுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர், 200 கிலோவுக்கு மேலான இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர். மேலும், குடோனின் உரிமையாளர் யார்...? எனவும். அவர் மாநகரப் பகுதியில் எந்தெந்த கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார் எனவும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...