டெல்லி : உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி 857 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.

குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்தும் ஆபாச இணையதளங்களை முடக்குவது குறித்தும் நாடாளுமன்றத்தில் வாதிடப்பட்டு 2000-க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டன. இந்த நிலையில், அனைத்துவிதமான ஆபாச இணையப்பக்கங்களையும் முடக்க வேண்டி உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி உத்தரவிட்டிருந்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையதளங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. அதன்ப,டி 857 ஆபாச இணைய தளங்களில் ஆபாச படங்கள் இருப்பதாகவும், அதனால் அந்த இணையதளங்களை முடக்க வேண்டுமெனவும் இணையதள வசதிகள் வழங்கும் அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ஜியோ உள்ளிட்ட அனைத்து தொலைபேசி நிறுவனங்களும், அனைத்து ப்ரவுசர்களிலும் ஆபாச இணையதள முடக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.