கோவை : சேலம் ரயில்வே கோட்டத்தின் 20-வது ரயில்வே பயணிகளுக்கான ஆலோசனைக் குழு (டி.ஆர்.யூ.யூ.சி.சி) கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் கலந்து கொண்டு பேசினார். ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் வரவேற்றார். கோட்டசெயல் பிரிவு மேலாளர் பூபதி ராஜா நன்றி கூறினார். சேலம் ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகளும், அதன் முன்னேற்றங்கள் குறித்து கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், பாதுகாப்பு, நேரம் தவறாமை மற்றும் ரயில்களில் தூய்மை, ரயில் பெட்டிகளில் தூய்மை உள்ளிட்டவை குறித்தும், கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

மகளிர் பாதுகாப்பு, ஓய்வறைகளில் உள்ள வசதிகள், நகரும் படிக்கட்டு, மின்தூக்கி வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் குறித்தும், ரயில்வே நடைமேம்பாலம், சி.சி.டி.வி. கேமிரா வசதி, ரயில் வருகை, புறப்பாடு குறித்த டிஜிட்டல் பலகை, ரயில் நிறுத்த இடம், கழிப்பறை வசதி, மருந்துக் கடைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை குழு உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நீலகிரி தொழில் வர்த்தக சபையின் ரோகித் கே.ஜெயின், மேட்டுப்பாளையம் வணிகர் சங்க அமைப்பினர் பி.ராஜேந்திரன், திருப்பூர் தொழில் வர்த்தக சபை நிர்வாகி ஆர்.கே.கே.எம்.சபாபதி, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகி பி.வெங்கட்ராகவன் (கரூர்), ஜி.இளங்கவி (ஈரோடு), ஈரோடு ரோட்டரி கிளப் நிர்வாகி சி.எஸ்.கெளதமன், சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் நிர்வாகி பி.அத்தியண்ணா, கோவை மாவட்ட ரயில்வே மற்றும் விமான பயணிகள் நலசங்கத்தின் நிர்வாகி ஆர்.சண்முகம், கிருஷ்ணகிரி எம்.பி. கே.அசோக்குமார் சார்பில் கே.பி.காத்தவராயன், கரூர் தொகுதி எம்.பி. தம்பிதுரை சார்பில் திருவிகா, திருப்பூர் எம்.பி. சத்யபாமா சார்பில் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.