கோவை : கோவையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல்துறையினருக்கு நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிழற்குடையுடன் கூடிய பயோ டாய்லெட் வசதி காவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காவல்துறையினர் என்றாலே பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குறைபாடுகள் சொல்லப்பட்டாலும், தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், நல்ல நாட்கள் முதல் கெட்ட நாட்கள் வரை அரசியல் தலைவர்கள் முதல் குடியரசுத் தலைவர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தலைவர்கள் வரும் பொழுது அதிக நேரம் நிற்க வேண்டிய சூழல்கள் உள்ளன. அதேபோல, போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியின்போது சிறுநீர் கழிக்க கூட போக முடியாத சூழ்நிலைகளும் நிலவி வருகின்றன. இதனால், காவல்துறையில் பணிபுரியும் பலருக்கு சிறுநீரக கற்கள் தொந்தரவுகளும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தேவையற்ற தொந்தரவுகள் உருவாகாமல் இருக்க அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கையும் வெகுநாட்களாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள சிக்னலுக்கு போலீசாரின் சிரமங்களை தவிர்க்க தனியார் நிறுவனத்தினர் பயோ டாய்லெட் வசதியுடன் கூடிய நிழற்குடை அமைத்து கொடுத்துள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு மட்டும் தான் பயோ டாய்லெட் வசதியுடன் கூடிய நிழற்குடை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 12 அடி உயரம் உள்ள இந்த நிழற்குடையில் கழிவறை வசதியும் இணைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை மின்விசிறி, இரவு நேரங்களில் லைட் உள்ளிட்ட வசதிகளுடன் செய்யப்பட்டுள்ளதால் போலீஸாரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.