போலீசாருக்கு நிழற்குடையுடன் கூடிய பயோ டாய்லெட் : நாட்டிலேயே முன்னோடியாக திகழும் கோவை மாவட்டம்

கோவை : கோவையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல்துறையினருக்கு நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிழற்குடையுடன் கூடிய பயோ டாய்லெட் வசதி காவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை : கோவையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல்துறையினருக்கு நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிழற்குடையுடன் கூடிய பயோ டாய்லெட் வசதி காவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

காவல்துறையினர் என்றாலே பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குறைபாடுகள் சொல்லப்பட்டாலும், தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், நல்ல நாட்கள் முதல் கெட்ட நாட்கள் வரை அரசியல் தலைவர்கள் முதல் குடியரசுத் தலைவர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தலைவர்கள் வரும் பொழுது அதிக நேரம் நிற்க வேண்டிய சூழல்கள் உள்ளன. அதேபோல, போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியின்போது சிறுநீர் கழிக்க கூட போக முடியாத சூழ்நிலைகளும் நிலவி வருகின்றன. இதனால், காவல்துறையில் பணிபுரியும் பலருக்கு சிறுநீரக கற்கள் தொந்தரவுகளும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தேவையற்ற தொந்தரவுகள் உருவாகாமல் இருக்க அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கையும் வெகுநாட்களாக இருந்து வந்தது.



இந்த நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள சிக்னலுக்கு போலீசாரின் சிரமங்களை தவிர்க்க தனியார் நிறுவனத்தினர் பயோ டாய்லெட் வசதியுடன் கூடிய நிழற்குடை அமைத்து கொடுத்துள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு மட்டும் தான் பயோ டாய்லெட் வசதியுடன் கூடிய நிழற்குடை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 12 அடி உயரம் உள்ள இந்த நிழற்குடையில் கழிவறை வசதியும் இணைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை மின்விசிறி, இரவு நேரங்களில் லைட் உள்ளிட்ட வசதிகளுடன் செய்யப்பட்டுள்ளதால்  போலீஸாரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...