பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலை சந்திக்க வேண்டும்: கோவையில் திருநாவுக்கரசர் பேட்டி

கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அகில இந்திய கட்சியின் மாநில தலைவர் என்பதால் இதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

எதிர்காலத்தில் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருத்து சொல்லலாம்.

தமிழகத்தில் பா.ஜ.க பலவீனமாக உள்ளது. அகில இந்திய அளவிலும் பா.ஜ.க பலவீனமாக உள்ளதால் கூட்டணி கட்சிகளும் விலகி வருகின்றன.

பா.ஜ.க.,விற்கு மாற்று காங்கிரஸ் என்பதைப் போல், பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் தான். அவர் தான் பிரதமர் வேட்பாளர்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். 

18 தொகுதிகளில் உள்ள 40 லட்சம் வாக்காளர்களுக்கு இப்போது சட்டமன்ற உறுப்பினர் கிடையாது.

ஆகவே, பதவி இழந்தவர்கள் தேர்தல் மூலம் மக்களை சந்திக்க வேண்டும்.

18 பேரும் மேல் முறையீடு செய்ய போவதால் அங்கு தேர்தல் வர வாய்ப்பில்லை.

முதலமைச்சர் 7,000 கோப்புகளில் கையெழுத்து போடுவதால் 7 கோடி மக்களுக்கும் என்ன நன்மை?

வேலை இல்லாமல் இருந்த 1 கோடி பேரில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? எவ்வளவு முதலீடு வந்தது? எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது? மக்களின் தரம் உயர்ந்துள்ளதா? அடிப்படை வசதிகள் மேம்பட்டதா? என பார்க்க வேண்டும்.

டெங்கு, பன்றிக் காய்ச்சல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

அ.தி.மு.க.,விற்கும், பா.ஜ.க.,விற்கும் உள்ள தொடர்பை மறைப்பதற்கு தி.மு.க.,வுடன் பா.ஜ,க இணக்கம் என விதண்டாவாதமான பதிலை தம்பிதுரை கூறி வருகிறார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...