திருப்பூரில் குமரன் மகளிர் கல்லூரியில் துணை முதலமைச்சர் திடீர் ஆய்வு

திருப்பூர் : திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் குமரன் மகளிர் கல்லூரியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் : திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் குமரன் மகளிர் கல்லூரியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர், மங்கலம் சாலையில் குமரன் மகளிர் கல்லூரி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு, இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் வில்வசேகர், கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிளிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். 



அதன்பின்னர், அனைவரும் கலந்து ஆலோசித்து கல்லூரியின் தேவைகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் எடுத்துரைக்கப்பட்டது. அதில், கல்லூரிக்கு தேவையான கணினி ஆய்வகம், கூடுதல் வகுப்பறைகள், அனைத்தும் வகுப்புகளிலும் இ-வகுப்பறைகளுக்காக எல்.சி.டி. போன்றவை ரூ. 2 கோடி செலவில் செய்து தர கல்லூரி சார்பாக வலியுறுத்தப்பட்டது. அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு விரைந்து முடித்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை முதலமைச்சர் உறுதியளித்தார். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...