உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன்.. மன்னிப்பு கேட்டு 'எஸ்கேப்' ஆனார் எச்.ராஜா

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.



சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா அவதூறாகவும், மிகவும் கொச்சையாகவும் பேசினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. ஆனால், தமிழக போலீஸ் அவரை கைது செய்யவே இல்லை. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் அமர்வு எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து, எச்.ராஜாவுக்கு நோட்டிஸ் அனுப்பியது. இது தொடர்பான வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது காலை 11 மணிக்கு எச்.ராஜா நீதிபதிகள் முன் ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

மன்னிப்பு

இதையடுத்து, வழக்கு விசாரணையில் நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். "நான் பேசியது தவறுதான். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். நான் பேசியது தவறு என்று தாமதமாகத்தான் உணர்ந்தேன். இதற்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்." என்று கூறினார்.

இவர் மன்னிப்பு கேட்டதை அடுத்து இவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டதன் மூலம் தண்டனையில் இருந்து தப்பி உள்ளார் எச்.ராஜா.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...