வெள்ளப் பெருக்கு காரணமாக திருமூா்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை

திருப்பூர்: உடுமலை அருகே திருமூா்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: உடுமலை அருகே திருமூா்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திருமூா்த்தி மலை பஞ்சலிங்க அருவி. இங்கு தினமும் வெளி மாவட்டம் மற்றும் கேரளா பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குழிப்பட்டி, குருமலை, பாலாறு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.



இதனால், பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணத்திற்காக சுற்றுலா பயணிகள் அருவி பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அருவியின் கீழ் பகுதியான கோவில் வளாகத்தில் குளித்து செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் அருவி பகுதிக்கு செல்லாமல் கண்காணிக்க வனத்துறை சார்பில் வனக்காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோவில் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருப்பதால், கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...