சபரிமலை கோவில் அனுமதி குறித்த தீர்ப்பு பக்தர்களுக்கு ஏமாற்றம் : கோவையில் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

கோவை : சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பு பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிவதாக கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை : சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பு பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிவதாக கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை ரயில்நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- சபரிமலை அய்யப்பன் கோவில் வழிபாட்டு முறைகள் பாரம்பரியமாக அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு அந்த ஆலயத்தில் உள்ள பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது. 

தேவசம்போர்டு மேல்முறையீடு செய்ய முடிவு செய்து இருப்பதாக அறிந்துள்ளேன். பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கின்றது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு செய்ய எதுவுமில்லை. மாநில அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் பா.ஜ.க.,வை மையப்படுத்தியே அனைத்து அரசியலும் நடைபெற்று வருகிறது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து இருக்கின்றனர். பா.ஜ.க., தமிழக அரசியலில் மையப்புள்ளியாக இருந்து வருகின்றது. தி.மு.க., பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக அ.தி.மு.க.,வினரும், 

அ.தி.மு.க., பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக தி.மு.க.,வினரும் கூறி வருகின்றனர். நாங்கள் எந்தக் கட்சிக்கும் பின்னால் இருந்து செயல்படவில்லை. அனைவருக்கும் முன்னோடியாக இருந்து வருகின்றோம்.

அடுத்த ஆண்டு வரும் தேர்தல் ஜூரம் காரணமாக ரபேல் ஊழல் குற்றச்சாட்டு பெரிதுபடுத்தப்படுகிறது. ரபேல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...