கோவையில் மளிகை கடைக்கு தீவைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மளிகைக் கடைக்கு தீ வைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை: கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மளிகைக் கடைக்கு தீ வைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சிவானந்தா காலனியில் உள்ள காந்திநகர் பகுதியில் அசன் கோயல் என்பவரது மகன் சையத் அலவி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரின் கடைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி சுமார் 11:45 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். 

இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து தீக்கிரையாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் சூர்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் மூலம் கடைக்கு தீ வைத்தவர் சூர்யா என்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பல்வேறு குற்றங்களில் சூர்யாவுக்கு தொடர்பு இருப்பதாலும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த உத்தரவு நகல் மத்திய சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...