தெய்வம் கனவில் கூறியதாக பா.ஜ.க பிரமுகர் வீட்டுக்கு வந்த பார்சல்

திருப்பூர்: திருப்பூரில் தெய்வம் கனவில் கூறியதாக, பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பார்சல் ஒன்றை கொடுத்துவிட்டு ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் தெய்வம் கனவில் கூறியதாக, பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பார்சல் ஒன்றை கொடுத்துவிட்டு ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதாவும் பனியன் நிறுவனத்தில் பனியாற்றி வருகிறார். இவர்களுக்கு சக்திவேல் என்ற 16 வயது மகன் உள்ளார்.



இந்நிலையில், இன்று காலை முத்துநகர் பகுதியில் வசிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து வீட்டிற்கு சென்ற கண்ணன், நாச்சிமுத்து கொடுக்க கூறியதாக ஒரு பார்சல் ஒன்றை வீட்டில் கொடுத்ததோடு, தனது செருப்பை கழட்டிவிட்டு ஓடினார்.

இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது, கண்ணன் அங்கு வந்து, தானே அந்த பையை கொடுத்ததாகவும், சுவாமி கனவில் வந்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை அழைத்த போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி கண்ணனை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...