உலக முதலுதவி தினம் : ரோட்டரி கிளப் சார்பாக கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை: உலக முதலுதவி தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தின் சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களைக் காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கொண்டாடி வருகிறது.

கோவை: உலக முதலுதவி தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தின் சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களைக் காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கொண்டாடி வருகிறது.



இந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) முதலுதவி அளிக்க முறையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ரோட்டரி சங்கத்தின் சார்பாக கோவை மாநகர போக்குவரத்து துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

லஷ்மி மில்ஸ் சிக்னல் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலுதவி அளிக்க வேண்டிய அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம் உட்பட உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...