ஹோப் காலேஜ் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு கிடைத்தது தீர்வு : டைடல் பார்க் சாலையைப் பயன்படுத்த ஆம்னி பேருந்துகளுக்கு உத்தரவு

கோவை: கோவை - அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் டைடல் பார்க் சாலையைப் பயன்படுத்தி பயணிகளை ஏற்றிக் கொள்ளுமாறு ஆம்னி பேருந்துகளுக்கு கோவை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை: கோவை - அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் டைடல் பார்க் சாலையைப் பயன்படுத்தி பயணிகளை ஏற்றிக் கொள்ளுமாறு ஆம்னி பேருந்துகளுக்கு கோவை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை அவினாசி சாலையில் சென்னை, பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்ல தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இந்த வழியில் செல்கின்றன. குறிப்பாக, அவினாசி சாலையில் உள்ள பீளமேடு, ஹோப்ஸ் போன்ற பகுதிகளில் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்கள் இருப்பதால் பொதுமக்களின் கூட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதேபோல, இந்த அவினாசி சாலையில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பயணிகளின் எண்ணிக்கைக்காகப் போட்டி போட்டுக் கொண்டு ஓடுகின்றன. இதில், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தாறுமாறாக பேருந்தை ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுத்துவதும் இந்த பகுதியில் வாடிக்கையாக உள்ளது.

நினைத்த இடமெல்லாம் நிறுத்தம் :

அவினாசி சாலையில் உள்ள ஹோப் காலேஜில் சிக்னலுக்கு முன்புறம் உள்ள ஜி.ஆர்.ஜி., விடுதி அருகே பேருந்து நிறுத்தமானது உள்ளது. ஆனால், பேருந்து ஓட்டுநர்கள் பழைய பேருந்து நிறுத்தமான பெட்ரோல் பங்க் அருகே பேருந்துகளை நிறுத்துகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள அந்தப் பகுதியில், பேருந்து ஓட்டுநர்களின் விதிமீறல்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. 



இப்படி விதியை மீறி பேருந்துகளை நிறுத்தியதால்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் விபத்தில் சிக்கினார். இதன் தொடர்ச்சியாக ஊடகங்களில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் அட்டகாசம் குறித்த செய்திகள் வெளியானது. பின்னர், இதன் எதிரொலியாக போக்குவரத்து விதிகள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. அதேபோல, விதிகளை மீறி பேருந்து நிறுத்தங்கள் இல்லாத இடத்தில் பேருந்துகள் நிறுத்தும் ஓட்டுநர்களிடம் பீளமேடு போக்குவரத்து காவல்துறை சார்பில் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இவையாவும் சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர், வழக்கம்போல பேருந்து ஓட்டுநர்கள் விதியை மீற தொடங்கி விட்டனர்.

ஆம்னி பேருந்துகளின் அட்டகாசம் :

ஹோப்ஸ் பகுதிகளில் பயணிகளை ஏற்றுவதற்காக முந்தியடித்துக் கொண்டு ஓட்டும் தனியார் ஆம்னி பேருந்துகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, சென்னை, பெங்களூர் செல்லக்கூடிய பயணிகளைப் பேருந்தில் ஏற்றுவதற்காக விதிகளை மீறுவதுடன், போக்குவரத்து நெரிசலைப் பற்றி கவலைப்படாமல், நிறுத்தங்களை தவிர்த்து பல்வேறு இடங்களிலும் பேருந்துகளை நிறுத்துகின்றனர். சுமார் மாலை 07.00 மணிக்கு தொடங்கும் இவர்களின் அட்டகாசம் இரவு 10.30 மணியானாலும் ஓய்வதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். 

மாற்றுஇடத்தின் மூலம் தீர்வு :

இதனால், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோவை மாநகர காவல்துறைக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்தனர். இதையடுத்து, பொதுமக்கள் ஏறுவதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதியைப் போக்குவரத்து போலீசார் மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் ஒதுக்கியுள்ளனர். அதாவது, டைடல் பார்க் செல்லக்கூடிய சாலையை ஆம்னி பேருந்துகள் பயன்படுத்தி பயணிகளை ஏற்றிக் கொள்ளுமாறு அறிவித்துள்ளனர். இதன் மூலம், ஹோப் காலேஜ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது :- ஹோப்காலேஜ் பகுதியில் பயணிகளை ஏற்ற நிற்கும் ஆம்னி பேருந்துகள், பாலத்தின் இடதுபுறத்தில் திருப்பி டைடல் பார்க் சாலையில் செல்ல வேண்டும். அங்கு பயணிகளை ஏற்றி, மீண்டும் 'டைடல் பார்க்' சாலையின் வழியாக சி.எம்.சி., சிக்னலில் இடதுபுறம் திரும்பி, அவினாசி சாலையில் செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தின்படி, எவ்வித தடையும் இன்றி ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி செல்லலாம். இந்தத் திட்டம் முழுக்க முழுக்க பொதுமக்களின் தேவைக்காக செய்யப்பட்டுள்ளது, என்றார். 

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலான கோவை மாநகர் போலீசாரின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் அவினாசி சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...