கேரள வெள்ள நிவாரணப் பணிகளில் கோவையின் பங்கு முதன்மையானது : C4TN பாராட்டு நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் புகழாரம்

கோவை: தேசிய அளவில் கேரள வெள்ள நிவாரணப் பணிகளில் கோவை மாவட்டத்தின் பங்கு முதன்மையானது என C4TN பாராட்டு நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் புகழாரம் சூட்டினார்.

கோவை: தேசிய அளவில் கேரள வெள்ள நிவாரணப் பணிகளில் கோவை மாவட்டத்தின் பங்கு முதன்மையானது என C4TN பாராட்டு நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் புகழாரம் சூட்டினார்.



கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கிய C4TN அமைப்பு மூலம் கேரள வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களை பாராட்டும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு, Cbe4Kerala குழுவில் இணைந்து உதவிய தன்னார்வ அமைப்புகளுக்கும், நன்கொடையாளர்களுக்கும் நினைவு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.



நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் பேசியதாவது :- வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கோவை மக்கள் ஒன்றிணைந்து உழைத்த அதே இடத்தில் பாராட்டு நிகழ்வு நடப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது. இதே குழு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும் மிக சிறப்பாக மீட்பு பணிகளை மேற்கொண்டது. வேறுபாடுகளை மறந்து மனிதநேயத்துடன் ஒன்று கூடிய மக்களையும், நிவாரணப் பொருட்களையும் மிக நேர்த்தியாக C4TN குழுவினர் ஒருங்கிணைத்து, கேரள மக்களுக்கு உதவினர். 



கேரள வெள்ளத்தின் போது பல்வேறு மாநில அதிகாரிகளும் ஒன்றிணைந்து மீட்பு பணிகள் குறித்த தகவல்களை பகிர்ந்து வந்தோம். அதில், அகில இந்திய அளவில் கேரளா மீட்பு பணிகளில் கோவை முதன்மையாக இருந்தது. இதே ஒருங்கிணைப்பாளர்களும், தன்னார்வலர்களும் இனிவரும் பேரிடர் சமயத்திலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...