கோத்தகிரி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் வழிதவறி புகுந்த ஒற்றைக் காட்டு யானையை சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடித்து காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் வழிதவறி புகுந்த ஒற்றைக் காட்டு யானையை சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடித்து காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

கோத்தகிரி அருகே உள்ள மூனு ரோடு பகுதியானது நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகளவு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று 7 வயது மதிக்கக்தக்க ஆண் காட்டு யானை ஒன்று, தனது கூட்டத்திலிருந்து பிரிந்து வழித்தவறி மூனுரோடு பகுதி குடியிருப்புக்குள் நுழைந்தது. அங்கும், இங்குமாக அழைந்த அந்த யானை தேயிலைத் தோட்டத்தின் முட்புதரில் பதுங்கிக் கொண்டது. 

இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, ஒற்றை யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...