உதகை நகரில் இரண்டு நாட்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை சோர்வு : உணவு வழங்கிய வனத்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

நீலகிரி: உதகை நகருக்குள் இரண்டு நாட்களாக சுற்றித்திருந்த காட்டெருமை சோர்வடைந்ததைத் தொடர்ந்து அதற்கு வனத்துறையினர் உணவு மற்றும் குடிநீர் வழங்கிய சம்பவம் அனைவரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.


நீலகிரி: உதகை நகருக்குள் இரண்டு நாட்களாக சுற்றித்திருந்த காட்டெருமை சோர்வடைந்ததைத் தொடர்ந்து அதற்கு வனத்துறையினர் உணவு மற்றும் குடிநீர் வழங்கிய சம்பவம் அனைவரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.



உதகை கமர்சியல் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட நகரின் மிக முக்கியப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றித்திருந்த காட்டெருமை பொது மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், பகல் நேரம் என்பதாலும் அருகில் பள்ளிக்கூடம் இருப்பதாலும் அதனை விரட்டாமல் அதை அங்கேயே இருக்கும் படி பார்த்துக் கொண்டனர்.

14 மணி நேரத்திற்கும் மேலாக அங்கே இருந்த காட்டெருமை, இரவில் தாவரவியல் பூங்கா அருகில் உள்ள கோடப்மந்த் சோலைக்குள் விரட்டப்பட்டது. தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் சோர்வுடன் காணப்பட்ட இந்த காட்டெருமைக்கு உணவு மற்றும் தண்ணீரை வனத்துறையினர் பறிவுடன் வழங்கினர். வனத்துறையின் இந்த செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...