திருப்பூரில் விதிகளை மீறி ரசாயனத்தால் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக அரசு விதித்துள்ள விதிகளை மீறி, திருப்பூரில் ரசாயன நிறமிகளை கொண்டு உருவாக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக அரசு விதித்துள்ள விதிகளை மீறி, திருப்பூரில் ரசாயன நிறமிகளை கொண்டு உருவாக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா என மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக விற்கப்படும் விநாயகர் சிலைகளில் ரசாயன நிறமிகள் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் லாவண்யா தலைமையிலான அதிகாரிகள், அவிநாசி சாலை மற்றும் அவிநாசி சந்தை பகுதிகளில் வடமாநில மக்கள் விற்பனை செய்ய வைத்திருந்த விநாயகர் சிலையை இன்று ஆய்வு செய்தனர். அதில், நீரில் கரைக்கும் போது சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் ரசாயன நிறமிகள் கலந்து தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, இரண்டு இடங்களிலும் விற்பனைக்காக வைத்திருந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...