திருநெல்வேலியிலிருந்து கோவைக்கு 4 மணி நேரத்தில் வந்த கல்லீரல்: வெற்றிகரமாக பொருத்தி கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சாதனை

கோவை: திருநெல்வேலியிலிருந்து 4 மணி நேரத்தில் சாலை வழியாக கே.எம்.சி. ஹெச் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட கல்லீரல் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

கோவை: திருநெல்வேலியிலிருந்து 4 மணி நேரத்தில் சாலை வழியாக கே.எம்.சி. ஹெச் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட கல்லீரல் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

மூளைச்சாவடைந்த திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த கோபிகிருஷ்ணன் (16 ) என்பவரது கல்லீரல் திருநெல்வேலியிலிருந்து சாலை வழியாக கோவை கே.எம்.சி. ஹெச் மருத்துவமனைக்கு சுமார் 4 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

சாலை வழியாக உடல் உறுப்பினை கொண்டுவரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்ட காவல்துறையினர் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து, கோவை கே.எம்.சி. ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா. ஜி. பழனிசாமி கூறுகையில், திருநெல்வேலியிலிருந்து 4 மணி நேரத்தில் உறுப்பினை கொண்டு வருவது சாத்தியம் அல்ல. ஆனால், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் சீரிய ஏற்பாட்டால் இது சாத்தியமாகி உள்ளது.

இதற்கு உறுதுணையாக இருந்த அனைவர்க்கும், உடல் உறுப்புக்களைத் தானமாக தர முன்வந்த கோபிகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...