குட்கா முறைகேடு வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரனை பதவியில் இருந்து நீக்கக் கோரிக்கை

குட்கா முறைகேடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



குட்கா முறைகேடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா வீடுகள் உட்பட தமிழகத்தில் 35 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதனிடையே, தரகர்களாக செயல்பட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோர், குட்கா வியாபாரி மாதவராவிடமிருந்து பணத்தை வாங்கி அதிகாரிகளிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட தரகர்கள் 2 பேரையும் விசாரணைக்குப் பிறகு டெல்லி அழைத்துச் செல்லவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குட்கா ஊழல் தொடர்பாக இன்று மட்டும் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குட்கா ஊழல் தொடர்பாக சென்னை ராயபுரத்தில் காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இன்ஸ்பெக்டர் சம்பத் என்பவரின் வீட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

இந்த நிலையில்,  குட்கா முறைகேடு குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில், அவர் பதவியில் இருக்கும் போதே 2-வது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பதால் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல, டி.ஜி.பி., ராஜேந்திரனையும் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...