விநாயகர் சதுர்த்துயை முன்னிட்டு கரும்பு சக்கையால் உருவாக்கப்பட்ட ‘பகாஷ் கணபதி’

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரும்பு சக்கையால் ஆன ‘பகாஷ் கணபதி’யை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரும்பு சக்கையால் ஆன ‘பகாஷ் கணபதி’யை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். 

கோவையை அடுத்த சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கரும்பு சக்கையில் இருந்து இந்த விநாயகரை முதல் முறையாக உருவாக்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகரின் வழிபாட்டிற்காக செம்பு, உலோக அச்சு வடிவத்தைக் கொண்டு பகாஷுடன் ஸ்டார்ச் கலந்து இந்த சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையானது தண்ணீரில் விடப்படும் பொழுது முழுமையாகக் கரைந்து தண்ணீரில் உள்ள மீன் மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. இதனால், செயற்கையான மூலப் பொருட்கள் மூலமாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகளினால் ஏற்படும் மாசு தடுக்கப்படுகிறது. இந்தக் கல்லூரியின் இயற்கை இழை ஆராய்ச்சி மையத்தினர் இந்த விநாயகரை தயாரித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முயற்சியில் 30 மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஈடுபட்டு பகாஷ் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். இந்த சிலையானது குறைந்த விலையில் விரைவில் கிராமம் மற்றும் நகர் மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளனர். 500-க்கும் மேற்பட்ட சிலைகளை மாணவர்கள் தயாரித்து விற்பனைக்காக கொண்டு செல்ல உள்ளனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...