அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து உரசியதில் முதியவர் படுகாயம்

கோவை : திருச்சி சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்புறம் இருசக்கர வாகனம் மீது உரசியதில், முதியவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோவை : திருச்சி சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்புறம் இருசக்கர வாகனம் மீது உரசியதில், முதியவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் அருகில் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் உதயக்குமார் என்ற முதியவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, போத்தனூர் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்பகுதி முதியவரின் இருசக்கர வாகனத்தின் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால், வாகனத்தில் இருந்து தலைக்குப்புற விழுந்த முதியவர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதிகளவிலான ரத்தம் வெளியேறியுள்ளது. 



உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அதிர்ச்சி ஊட்டும் வகையில் ஹாரன் சத்தம் அடித்ததால் தான் முதியவர் நிலை தடுமாறி இந்த விபத்தில் சிக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனவே, தனியார் பேருந்துகளின் ஒலி மற்றும் வேகத்தின் அளவைப் போக்குவரத்து காவலர்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...