பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இது தானா? - செய்தியாளர்களிடம் தமிழிசை கதறல்

சென்னை: சோபியா கைது விவகாரத்தில், அவர் இப்படி பேசியிருக்கலாமா? என்றும், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இது தானா? என்றும் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

சென்னை: சோபியா கைது விவகாரத்தில், அவர் இப்படி பேசியிருக்கலாமா? என்றும், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இது தானா? என்றும் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் சோபியா என்ற மாணவி பாசிச பா.ஜ.க அரசு ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து அவருடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த மாணவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விமானத்தில் நான் எனது இருக்கையில் அமர்ந்தவுடன் பாசிச பா.ஜ.க அரசு ஒழிக என சோபியா கோஷமிட்டார். அப்போது நான் ஏதோ சின்ன பெண் கோஷமிடுகிறார் என விட்டுவிட்டேன். இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் தொடர்ந்து கோஷமிட்டார். நாகரிகம் கருதியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று கருதியும் சமூக அக்கறையாலும் நான் அமைதியாக இருந்தேன்.

பின்னர், விமானத்தில் இருந்து இறங்கியதும் அந்த பெண் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே சென்றார். அப்போது அவரிடம் பொது தளத்தில் இப்படி பேசுவது முறையா? என கேட்டேன். அதற்கு அவரோ, 'இது எனது பேச்சுரிமை' என்றார். அதுமட்டுமல்லாமல் என்னை அநாகரிகமாகப் பேசினார். அவரை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். எனக்கு அந்த சந்தேகம் இருந்தது. அதனால் போலீசாரிடம் விசாரிக்கக் கோரி புகார் அளித்தேன். கைது நடவடிக்கை என்பது காவல்துறை சம்மந்தப்பட்டது. 

ஸ்டாலின் நியாயம் பேசலாமா?

 

பேச்சுரிமை என்றால் அதற்கான இடம், நேரம், களம் எல்லாம் கிடையாதா. அதற்காக விமானத்தில் பேசலாமா. வீட்டுக்குச் சென்று சண்டையிட்டால் அது சரியாகிவிடுமா. பேசுவது என்றால் மேடை போட்டு பேச வேண்டும். இந்த சம்பவத்துக்கு என்னை ஸ்டாலின் கண்டித்துள்ளார். நான் கேட்கிறேன், அவரது கட்சியை பற்றி தவறாக பேசியவர்களை மெட்ரோ ரயிலில் அடித்ததை மறந்துவிட்டாரா? தங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் தினகரன் அலுவலகத்தை எரித்தவர்கள் இன்று நியாயம் பேசுவதா?

இவ்வாறு தமிழிசை கூறினார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...