தடாகம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து அரிசியை உண்ட யானைகள்: தப்பியோடிய பொதுமக்கள்

கோவை: தடாகம் அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: தடாகம் அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

களையனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், ஜெயக்கொடி தம்பதியினர். இவர்களுக்கு கிஷோர் என்ற 19 வயது மகன் உள்ளார். இன்று நள்ளிரவு 2.30 மணியளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்கவே, சக்திவேல் அங்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு தாய் யானையும், ஒரு குட்டி யானையும் வீட்டின் கதவினை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.



இதனால் பதற்றமடைந்த சக்திவேல் மற்றும் ஜெயக்கொடி ஆகிய இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். வீட்டினுள் சிக்கிக்கொண்ட கிஷோர் அங்கிருந்த சிமென்ட் சிலாப்பில் ஏறிக் கொண்டார்.

தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே சென்ற குட்டி யானை வீட்டினுள் இருந்த அரிசியை தூக்கி சென்றது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பதாகவும், இதனை உடனடியாக களைய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...