பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை: கல்லூரி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை: கல்லூரி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2015-ம் ஆண்டு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கல்லூரிக்காக நின்றுகொண்டிருந்த நந்திதா என்ற மாணவிடம், அவரது உறவினர் விஜயகுமார் (27) தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இது தொடர்பான வழக்கு கோவை 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த போது, விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும், சமூகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்து வருகிறது. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இதுபோன்ற தண்டனைகள், பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...