முதலமைச்சரைக் கண்டித்து கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்து விமர்சனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்து விமர்சனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க., கட்சி கூட்டத்தில், ஆசிரியர்களின் ஊதிய வரலாற்றைப் பற்றி அறியாமல் தரக்குறைவாக பேசியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, வருமான வரியை அரசு ஊழியர்கள் முறையாக செலுத்தி வருகிறோம், ஊழலில் ஈடுபட்டு சிறைக்கு செல்லவில்லை, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை எனக் கூறி முதலமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், முதலமைச்சர் தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் ,ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது :- இந்திய அரசியில் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் ரகசிய பிரமாணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர்கள் ஊதிய வரலாற்றைப் பற்றி அறியாமல் தரக் குறைவாக பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனை வாபஸ் பெற வேண்டும். மேலும், தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மத்திய அரசு வழங்கிட கூடிய புள்ளிகளில் இருந்து போராடி பெற்றது, என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...