மதம் மற்றும் அரசியலை கலக்காதீர் : நீலகிரியில் 'இந்து' ராம் வலியுறுத்தல்

நீலகிரி: மதம் மற்றும் அரசியலை கலக்கக்கூடாது என்று நீலகிரியில் நடைபெற்ற விழா ஒன்றில் 'தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராம் வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி: மதம் மற்றும் அரசியலை கலக்கக்கூடாது என்று நீலகிரியில் நடைபெற்ற விழா ஒன்றில் 'தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராம் வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குட்ஷெப்பர்டு பள்ளியில் பி.சி.தாமஸ் அறக்கட்டளை தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் 'தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் என்.ராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அறக்கட்டளை தொடங்கி வைத்து பேசினார்.



அப்போது, "இந்தியா சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் சில துறைகளில் வளர்ந்திருந்தாலும் கல்வி, சுகாதாரம், சம வாய்ப்பு, வருவாய், சுற்றுச்சூழல் உட்பட பல துறைகளில் பின் தங்கியுள்ளோம். இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். இதை அரசு, தன்னார்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கையில் எடுக்க வேண்டும்.

நமது நாட்டில் மதவாதம் கடந்த பல ஆண்டுகளாக தவறான பாதையில் பயணிக்கிறது. இது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மதவாதம் அரசியல் சாயம் பெற்றிருக்கிறது. பெரும்பான்மையின மற்றும் சிறுபான்மையின மதவாதம் அதிகரித்திருக்கிறது.. 

இன்றைய காலகட்டத்தில் மதம் மற்றும் அரசியலை கலக்கக்கூடாது. அரசியல் ஆதாயத்துக்காக மதத்தை பயன்படுத்தக் கூடாது. கடந்த 70 ஆண்டுகளில், அரசியல் காரணங்களுக்காக மதவாதத்தைப் பயன்படுத்துவது தொடர்கிறது. 

அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தாவிட்டால் மதவாதத்தை கட்டுப்படுத்த முடியும். இது, தொடர்ந்தால் இந்தியா முன்னேற முடியாது." என்றார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...