நீலகிரி: தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவிற்கு இளம் படுகர் சங்கம் சார்பில் உதகையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 7-ம் தேதி தி.மு.க., தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இலக்கியவாதிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், படுகர் இன மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கிய கருணாநிதிக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உதகையில் உள்ள இளம்படுகர் சங்க கட்டிடத்தில் நடந்தது. முன்னதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் படுகர் இன மக்கள் பலர் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதி ஆட்சியின் போது, முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களுக்கு அந்தஸ்து வழங்கும் வகையில், தமிழக அமைச்சரவையில் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கிக் கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.