திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் மருத்துவமனை எதிரே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி அளிக்க மருத்துவ நிர்வாகம் முன்வராத நிலையில், அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த திருநங்கையின் மனிதநேயம் அனைவரையும் நெகிழு வைத்தது.

திருப்பூரைச் சேர்ந்த பழனிசாமி தனது மனைவி சரஸ்வதியுடன் இருசக்கர வாகனத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்து சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சரஸ்வதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பேருந்தின் பின் சக்கரம் அவரது இடதுகால் மீது ஏறியது. இந்த விபத்தில் அவரது கால் நசுங்கியது. சம்பவ இடத்தில் சென்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் சரஸ்வதியை உடனடியாக சாலையின் ஓரம் இழுத்து தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றினார்.
விபத்து நடந்த இடத்திலிருந்து வெறும் 20 மீட்டர் தொலைவில் ஏ.எம்.சி., எனும் தனியார் மருத்துவமனை இருந்தும், விபத்தையறிந்து முதலுதவி அளிக்கக்கூட யாரும் முன்வரவில்லை. சிறிதுநேரம் கழித்து தகவலின் பேரில் வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சரஸ்வதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி அளிக்கத் தனியார் மருத்துவமனை நிர்வாகம் முன்வராத நிலையில், விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வரை அந்த திருநங்கை சம்பவ இடத்திலேயே இருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.