கோவை அரசு பேருந்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகை கடத்தல் : ஒருவர் கைது

கோவை: கோவையில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பேருந்தில் பயணித்த வாலிபரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பேருந்தில் பயணித்த வாலிபரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள வாளையார் சோதனை சாவடியில் கேரள காவல்துறை ஆய்வாளர் சசிதரன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற தமிழக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

பேருந்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த மகேந்திரகுமார் (31), என்பவரை பரிசோதித்ததில், அவரிடம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ எடை கொண்ட வைர நகைகள் இருந்தது தெரியவந்தது.

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, வைரங்களும், நகைகளும் கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்டதும், இங்கிருந்து கேரளாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லப்படுவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மகேந்திரகுமாரிடமிருந்து வைரங்களை ஒப்படைக்க வேண்டிய நிறுவனங்களின் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வைரங்களை அவரிடம் ஒப்படைத்த நபர் யார்? கோவை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையை மீறி வைர நகைகள் கடத்தப்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...