வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழப்பு.., கணவர் கைது; குழந்தைகள் தவிப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததில், பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததில், பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். 

புதுப்பாளையம் ரத்னகிரீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). பனியன் வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கிருத்திகா (28) தனியார் பள்ளி ஆசிரியை. 

இந்த தம்பதிக்கு, டிமானி என்ற மூன்று வயதான பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த கிருத்திகா-க்கு, கடந்த 22-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.

அப்போது, கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யாவுக்கு இயற்கை முறையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது அந்த தம்பதியினருக்கு தெரியவந்தது.

தொடர்ந்து கிருத்திகாவுக்கும் அதே முறையில் பிரசவம் பார்க்க கார்த்திகேயன் திட்டமிட்டார். அதன்படி, பிரசவம் பார்த்ததில் 3.5 கிலோ எடையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

ஆனால், அதன் பிறகே அதிர்ச்சி காத்திருந்தது. பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி மயக்கமடைந்தார்.

அவரை, 108 ஆம்புலன்சில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில், தாய் உயிரிழந்தது அனைத்துத் தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக, கார்த்திகேயன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று அவரை கைது செய்துள்ளனர்.

பெற்ற தாய் இறந்த போக, தந்தை கைதாகி சிறைக்கு செல்ல, பச்சிளம் குழந்தையும், மூன்று வயது பெண் குழந்தையும் பரிதாபித்து நிற்கின்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...