திருப்பூர் ஏற்றுமதியாளர்களிடம் 6 கோடி வரை மோசடி செய்த இத்தாலி நாட்டு பெண்: நடவடிக்கை கோரி மனு

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்களிடம் 6 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறி, பாதிக்க முகவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்களிடம் 6 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறி, பாதிக்க முகவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.

ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. குண்ணங்கல்பாளையம் பகுதியில் கொள்முதல் தரகராக அலுவலகம் நடத்தி வருகிறார். 



இதனிடையே இத்தாலி நாட்டை சேர்ந்த பெட்டி ரோசிட்டோ என்பவர் திருப்பூர் காங்கயம் சாலையில் பி-டிரேட் என்ற பெயர் கொள்முதல் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பெட்டி ரோசிட்டோ, முகவரான கிருஷ்ண மூர்த்தி மூலம் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பின்னலாடைகளை மொத்தமாக இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்நாட்டில் வியாபாரம் செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு பனியன் தயாரிப்பதற்கான ஆர்டரை, கிருஷ்ணமூர்த்தி மூலம் அவர் கொடுத்துள்ளார். ஆனால், பின்னலாடை பெற்று கொண்டு இதுவரை ரூ.6 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள் பெட்டி ரோசிட்டோவிடம் பணம் கேட்ட போது பணம் தராமல் இழுத்தடிப்பில் ஈடுபட்டவர், ஒரு கட்டத்தில் பணத்தைத் தர முடியாது என கூறியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததோடு, மோசடியில் ஈடுபட்ட பெட்டி ரோசிட்டோவிடமிருந்து பணத்தை மீட்டுத் தர கோரி புகார் மனு அளித்தார். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...