உக்கடம் மேம்பால பணிகளை நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுவினர்

கோவை: தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுவினர் கோவை உக்கடம் மேம்பால பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

கோவை: தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுவினர் கோவை உக்கடம் மேம்பால பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2018-19 ஆம் ஆண்டிற்கான அரசு உறுதி மொழி குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், வருவாய் அதிகாரிகள் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் எந்தெந்த பணிகள் நிறைவடைந்துள்ளது என்பது குறித்தும் அரசு உறுதிமொழி குழு ஆய்வு மேற்கொண்டது. 

பின்னர், கோவை உக்கடம் பகுதியில் உள்ள மேம்பாலம் கட்டப்படும் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது  என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, அரசு உறுதி மொழி குழு தலைவர் இன்பத்துறை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போது கோவையில் நடைபெற உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தோம். மேலும் கோவையில் நடந்து முடிந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த ஆய்வில் மொத்தம் 152 பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கணக்கு கொடுக்கப்பட்டது. அதில் நாங்கள் 65 பணிகளை உறுதி செய்ததாக தெரிவித்தார். 

மேலும், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதிமொழி குழு என்பது எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களால் சட்டமன்றத்தில் அளிக்கப்படும் அறிக்கைகள் ஆய்வு பணிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, தமிழக சட்டமன்ற சபாநாயகர் இடம் அளிப்பதுதான் எனவும் சபாநாயகர் அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள முடியாது அதனால் தான் அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் வேலை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த தொகுதி எம் எல் ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் சட்டமன்ற பேச்சுக்கள் பணிகள் அறிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்து சபாநாயகரிடம் ஒப்புதல் அனுப்புவதாகவும் அதன்படி கோவையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

கோவையை பொறுத்தவரை, தான் பத்து ஆண்டு காலம் கோவையில் வசித்து வந்துள்ளதால் நெரிசலை குறைக்க உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் கோவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும் நாளை காரமடை மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் ஆய்வு செய்த பின்னர் நீலகிரி மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் அதன் பின்னர் அடுத்தடுத்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து அறிக்கைகளைச் சபாநாயகரிடம் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...