திருப்பூர்: திருப்பூரில் முறையான மருத்துவ வசதிகளின்றி வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் முறையினால் தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழங்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மரூட்டி எனும் பிரசவ முறையை நடைமுறை காலத்தில் மேற்கொள்ள முயற்சித்து பெண்களின் உயிருடன் விளையாடும் ஆபத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் இந்த பிரசவ முறை அதிகரித்து வருகிறது. மரூட்டி பிரசவ முறை என்பது எவ்வித பிரசவ கால மருந்தையும் உட்கொள்ளாமலும், மருத்துவரிடம் செல்லாமலும் வீட்டிலேயே, வீட்டிலுள்ள நபர்களால் குழந்தை பெற்று கொள்ளும் முறையாகும். இதற்கு மிகுந்த மன தைரியமும், உடல் உறுதியும் தேவை. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவ்வாறான பிரசவ முறை என்பது உயிருக்கே ஆபத்து ஏற்படுத்துவதாகும்.
திருப்பூர் காங்கயம் சாலை புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா, அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், இரண்டாவது முறையாக கிருத்திகா கர்ப்பம் அடைந்தார். கார்த்திக் தனது நண்பரின் மனைவி மரூட்டி பிரசவ முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதை அறிந்து, இவர்களும் மரூட்டி பிரசவ முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானித்து மருத்துவம் எதுவும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டு, மதியம் 2 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு கிருத்திகாவின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து 108-க்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் வந்த ஊழியர்கள், கிருத்திகாவிற்கு முதல் உதவி அளித்து, அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பிரசவத்திற்கு முன்னதாக கிருத்திகாவின் தாயார் பலமுறை மருத்துவமனை வர வற்புறுத்தியும் கிருத்திகா மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், பிரசவத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கு வீட்டிற்கு வந்த சுகாதார ஊழியர்களுக்கு முறையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆதலால், கிருத்திகா மரணம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் ஊரக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக, திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் இதேபோன்ற பிரசவ முறையில் பிறந்த குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாது போன காரணத்தால் மருத்துவம் பார்க்க சென்ற மருத்துவர்களுக்கு மிரட்டல் விடுத்து மனரீதியிலான அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் மருத்துவர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
மேலும், இம்முறை குறித்து முழுமையாக அறியாத ஒருசிலர் இதுகுறித்து தேவையற்ற நம்பிக்கையை ஏற்படுத்தி பெண்களின் உயிருடன் விளையாடுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. மிகுதியான பணி சூழலும், சத்தற்ற உணவு முறைகளாலும் தற்கால பெண்களின் உடல்நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது. பிரசவம் என்பது மறுபிறப்பு என்று கூறப்படும் நிலையில், அதில் விளையாடுவது என்பது உயிருடன் விளையாடுவது போன்ற செயலாகும் என்கின்ற கருத்தே பரவலாக நிகழ்கிறது.