வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி : திருப்பூரில் வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வதாக பலரிடம் சேர்த்து ரூ. 27 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வதாக பலரிடம் சேர்த்து ரூ. 27 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் குமரன் சாலையில் 'காக்ஸ் அன் கிங்டம்' என்னும் டூரிஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடு சுற்றுலா செல்ல விரும்புபவர்களை பேக்கேஜ் முறையில் அழைத்து செல்லப்படுவர். இதில், பெரம்பலூரைச் சேர்ந்த மோகன் என்பவர் மேலாளராகப் பணி புரிந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக வாடிக்கையாளர்கள் பேக்கேஜ் டீல் முறையில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், குறித்த தேதியில் அழைத்து செல்லவில்லை. 

இது தொடர்பாக மேலாளர் மோகனை தொடர்பு கொண்ட போது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நிறுவனமும் பூட்டியே கிடந்தது. அதன்பின் கோவை அலுவலகத்தில் புகார் செய்து, அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது போலியான புக் மூலம் ரூ. 27 லட்சம் கையாடல் செய்தது தெரிய வந்தது. பின்னர், கோவை அலுவலக மேலாளர் ஐசக் சாமுவேல், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...