இலங்கையில் இருந்து கோவைக்கு ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வந்தவர் கைது

கோவை: இலங்கையில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: இலங்கையில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக கோவை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ அன்சாரி (38) என்பதும், எல்.இ.டி., டிவி-யின் உட்புறத்தில் வைத்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.



இதையடுத்து தங்க கட்டிகளை பரிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தற்போது பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ. 34 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...