மத்திய அமைச்சர் சந்திக்க மறுத்திருப்பது ஓ.பி.எஸுக்கான தலைகுனிவு, தமிழகத்திற்கானது அல்ல : தமிமுன் அன்சாரி

திருப்பூர் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்திருப்பது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கான தலைகுனிவு என்றும், தமிழகத்திற்கான தலைகுனிவல்ல என சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்திருப்பது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கான தலைகுனிவு என்றும், தமிழகத்திற்கான தலைகுனிவல்ல என சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்திருந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், "தமிழக நலனுக்காக ஓ.பி.எஸ்., மத்திய அமைச்சரை சந்திக்க முடியாமல் போயிருந்தால் அது தமிழகத்திற்கான தலைகுனிவு எனக் கருதலாம். ஆனால், அவர் தன் நலனுக்காக சந்திக்க சென்றிருப்பதால் அது அவருக்கான தலைகுனிவு மட்டுமே. 



உள்ளாட்சி அமைப்புகளின் சொத்துவரி உயர்வை 50 முதல் 100 சதவிகிதம் உயர்த்தியிருப்பது மனிதநேய ஜனநாயகக் கட்சி கண்டிக்கிறது. அதனை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு அனைத்துக் கட்டத்திலும் தோல்வியடைந்து விட்டது. ஜி.எஸ்.டி., வரியால் பல லட்ச நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி., வரியினை 10 சதவிகிதத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.,வின் நிலை மாறியிருக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.,விற்கு துணைபோயிருக்காது. 

தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை நடிகர்களால் நிரப்பிட முடியாது. கோடம்பாக்கத்தில் தலைவர்களை தேடும் நிலை முற்றுபெற்றிருக்கிறது. பெருமுதலாளிகள் அம்பானி, அதானி போன்றோர்தான் தற்போது நாட்டை ஆள்கின்றனர். மத்தியில் 3-வது அணி எந்தவிதத்திலும் நன்மையளிக்காது. சாதி மற்றும் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு மாற்றாக வலுவான அணியினை அமைத்திட வேண்டும். இந்திய மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...