லாரி ஸ்ட்ரைக் எதிரொலி: கோவையில் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

கோவை: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து ஆறாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தால், மார்க்கெட், தொழிற்சாலைகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில், கோவையில் ரேஷன் பொருட்களை கடைகளுக்கு கொண்டு சேர்க்க முடியாத காரணத்தால் மக்களுக்கு அரசி உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 1,400 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 10 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால், அங்கு பொருட்கள் எடுத்துச் செல்ல முடியவில்லை.

இதனால், ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெரியாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில், "மாதந்தோறும் ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி வாங்குவேன். ஆனால், தற்போது இரண்டு மூட்டை மட்டுமே இருப்பு உள்ளதாகக் கூறி 5 கிலோ அரிசி மட்டுமே வழங்கியுள்ளனர். இந்த பிரச்சனையை அரசு விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்." என்றார். 

"எனக்கு 20 கிலோ அரிசி கிடைத்துவிட்டது. ஆனால், சர்க்கரை இருப்பு இல்லை என்று கூறுகின்றனர். எங்களைப் போன்ற ஏழை மக்கள் தனியாரிடம் இருந்து சர்க்கரை வாங்கி வாழ்க்கை நடத்துவது இயலாத காரியம்." என்கிறார் சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர்.

இது குறித்து வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சேமிப்பு கிடங்கில் அடுத்த 15 நாட்களுக்குத் தேவையான பொருட்கள் இருப்பு உள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அவற்றை நியாய விலை கடைகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது சிறிய ரக சரக்கு வாகனங்கள் மூலமாக அவற்றை அனுப்பு வருகிறோம். விரைவில் இந்த தட்டுப்பாடு நீங்கும்." என்றார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...