கோவையில் போதை மருந்து விற்பனை செய்ய முயன்ற இளைஞர்கள் 4 பேர் கைது

கோவை: பெங்களூரில் இருந்து போதை ஊசி மருந்து கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்ய முயன்ற இளைஞர்கள் 4 பேரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை: பெங்களூரில் இருந்து போதை ஊசி மருந்து கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்ய முயன்ற இளைஞர்கள் 4 பேரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவையில் சில மருத்துவமனைகளில் மயக்க மருந்துகள் அடிக்கடி மாயமாகி வந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகங்களும் போலிசாரிடம் புகார்கள் அளித்துள்ளனர். இதனையடுத்து, கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்தினை திருடி போதை ஊசி தயாரித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் சில சமூக விரோதிகள் போலிசாரால் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், இன்று காந்திபுரத்தில், பெத்தடின் போதை மருந்து பயன்படுத்தும் கும்பல் இருப்பதாகவும், பெங்களூரில் இருந்து பெத்தடின் போதை மருந்தை ஆம்னி பேருந்துகள் மூலம் கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்து வருவதாகவும் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த பெங்களுரை சேர்ந்த ஜாய் இம்மானுவேல், கோவையை சேர்ந்த சிகாஸ், ஜில்பிகான் அலி, முகமது அனாப் ஆகிய 4 பேரை காட்டூர் போலிசார் கைது செய்தனர். 

பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, பெங்களூரில் இருந்து குறைவான விலைக்கு பெத்தடின் போதை மருந்தை வாங்கி வந்து கோவையில் உள்ள இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விநியோகம் செய்ததை ஒப்புக்கொண்டனர். 

இதனையடுத்து, ஜாய் இம்மானுவேல், சிகாஸ், ஜில்பிகான் அலி, முகமது அனாப் ஆகிய 4 பேரையும் கைது செய்த காட்டூர் காவல் துறையினர் அவர்களை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 4 பேரையும் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, 4 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...