திருப்பூர்: திருப்பூரில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் விவசாய கிணறு பயன்படுத்த முடியாத அளவிற்குப் பச்சை நிறத்தில் காட்சியளிப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், நீர் நிலைகளும், நிலத்தடி நீரும் மாசடைந்து வருகின்றன. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை எஸ்.பெரியபாளையம் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்த நீர் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக திடீரென பச்சை நிறமாக மாறிக் காட்சியளித்தது. இதற்கு காரணம் அப்பகுதிகளில் செயல்படும் சாய ஆலை மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவு நீர் எனத் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து விவசாயி பாலகிருஷ்ணன் கூறும் பொழுது, "இப்பகுதியில் செயல்படும் சில சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் சாயக் கழிவு நீரை போர்வெல் மூலம் நிலத்தில் இறக்கி விடுகின்றனர். இதன் காரணமாக நிலத்தடி நீர் கெட்டு முற்றிலும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விவசாய நிலங்கள் காய்ந்து போய் உள்ளன. கழிவு நீர் கிணற்றில் கலந்ததன் காரணமாக கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளன. இதுகுறித்து பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை," இவ்வாறு அவர் கூறினார்.