இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபரை கோவையில் கைது செய்த பாட்னா போலீஸ்

கோவை : பீகாரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பப்புகுமார் (30) என்பவரை பாட்னா மகளிர் காவல்நிலைய போலீசார் கோவையில் இன்று கைது செய்தனர்.

கோவை : பீகாரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பப்புகுமார் (30) என்பவரை பாட்னா மகளிர் காவல்நிலைய போலீசார் கோவையில் இன்று கைது செய்தனர்.

அவுரங்கபாத் பகுதியைச் சேர்ந்த பப்புகுமார் கோவை சூலூர் விமானப்படையில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனடிப்படையில், பப்புகுமாரை கைது செய்ய பிடிவாரண்டுடன் பாட்னா அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பார்வதி குமாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு கோவை வந்தனர்.

இங்கு, சூலூர் காவல்நிலைய போலீசார் உதவியுடன் பப்புகுமாரை கைது செய்த பாட்னா போலீசார் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, அவரை பீகார் அழைத்துச் செல்ல நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்ததையடுத்து தொடர்ந்து, போலீசார் அவரை ரயில் மூலம் பீகார் அழைத்து சென்றனர். வரும் 27-ம் தேதி பீகார் நீதிமன்றத்தில் பப்புகுமார் ஆஜர்படுத்த உள்ளார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...