விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளருக்கு எதிர்ப்பு : வெளியூர் நபரை நியமித்ததால் கிராம மக்கள் முற்றுகை

கோவை : மேட்டுப்பாளையம் அருகே காந்தவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு விதிகளை மீறி வெளியூர் நபரை சத்துணவு அமைப்பாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கோவை :  மேட்டுப்பாளையம் அருகே காந்தவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு விதிகளை மீறி வெளியூர் நபரை சத்துணவு அமைப்பாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். 

மலையடிவார கிராமமான காந்தவயல் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளர் இல்லாமல் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, உள்ளூரைச் சேர்ந்த நபரை அப்பணிக்கு நியமிக்க ஊர்மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தங்களது வனம் சார்ந்த காந்தவயல் கிராமத்தையும், பிற ஊர்களையும் இடையில் ஓடும் காந்தையாறு பிரிப்பதால் வெளியூர் நபர்கள் இங்கு வந்து செல்வது சாத்தியமற்றது என்பதாலும், சத்துணவு அமைப்பாளர் பணிக்கு தொடர்புடைய பணியிடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருப்போர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்ற அரசு விதிமுறைப் படியுமே இக்கோரிக்கையினை அவர்கள் முன்வைத்தனர்.



இந்த நிலையில், பணி நியமன விதிகளை மீறி காந்தவயல் கிராமத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூடுதுறை என்னும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை சத்துணவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் தற்போது பணியில் சேர்ந்தாலும் தொடர்ந்து இங்கு வந்து பணியாற்ற இயலாது, தற்போது கூட காந்தயாற்றின் காட்டாற்று வெள்ளத்தில் இங்குள்ள பாலம் மூழ்கும் நிலையில், அவர் எப்படி தங்களது கிராமத்திற்கு தினசரி வந்து செல்ல இயலும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். 

இதேபோல, முன்பு நியமிக்கப்பட்டவர்கள் யாரும் தங்களது பணியினை தொடர இயலாமல் வேறு இடத்திற்கு சென்று விட்ட நிலையில், மீண்டும் இதனையே தொடர்வது கூடாது என்கின்றனர். உள்ளூரைச் சேர்ந்த தகுதியுடைய 27 பேர் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், சட்ட விதிகளுக்குப் புறம்பாக இந்தப் பணி நியமனம் நடைபெற்றுள்ளதாக காந்தவயல் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர் பெண் இன்று பொறுப்பு ஏற்கும் முன்பாக, காந்தவயல் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்திலும், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் காந்தவயல் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தங்களது கோரிக்கையினை மனுவாக எழுதி பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தபின், ஊர் மக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் எதிர்ப்பால், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட பெண் பொறுப்பேற்காமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...