எஃப்.ஐ.ஏ., ஏ.பி.ஆர்.சி., குழுமத்தின் தலைவராக விக்கி சந்தோக் மீண்டும் தேர்வு

சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு, ஆசிய பசிபிக் பந்தய சாம்பியன்ஷிப் பணிக் குழுமத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்ததாக விக்கி சந்தோக் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு, ஆசிய பசிபிக் பந்தய சாம்பியன்ஷிப் பணிக் குழுமத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்ததாக விக்கி சந்தோக் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மலேசியாவில் உள்ள ஜோகோர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, எஃப்.ஐ.ஏ., ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப் வொர்க்கிங் குழுமத்தின் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில், உறுப்பினர் வெயின் கிறிஸ்டியும் பங்கேற்று, சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் திட்டங்கள் மற்றும் சவால்களை எடுத்துரைத்தார். 

பின்னர், இந்தப் பதவிக்கான போட்டியில் இடம்பெறாமல் இருந்தாலும், சக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் வற்புறுத்தலால் விக்கி சந்தோக் ஒருமனதாக நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக ஜப்பானைச் சேர்ந்த டக்காஹிட்டோ சுகிதாவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து விக்கி சந்தோக் பேசுகையில், "சக உறுப்பினர்கள் தன்னை ஒருமனதாக மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பந்தயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆற்றிய பணிளாலே, தற்போது நான் கவுரவிக்கப்பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் புதிய பிராந்தியங்களில் போட்டிகளை விரிவுபடுத்துவதே தங்களது முக்கிய நோக்கமாகும்," என்றார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...