அவினாசி-அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் - இயற்கை ஆர்வலர்கள்

கோவை: நீண்ட இழுபறிக்குப்பின் அவினாசி-அத்திக்கடவு கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது ரூ.1850 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

கோவை: நீண்ட இழுபறிக்குப்பின் அவினாசி-அத்திக்கடவு கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது  ரூ.1850 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு தற்போது காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து ஆண்டுக்கு 2 டி.எம்.சி நீர் எடுத்து, அதனை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முன்னதாக ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ரூ.1850 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது வகுக்கப்பட்ட இத்திட்டத்தில் சிறிய மாற்றம் செய்தால், மின்சாரம் வீணாவதைத் தடுக்க முடியும் என்றும், சுத்தமான நீர் கிடைக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இது குறித்து கவுசிகா நதி மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது காளிங்கராயன் வாய்க்காலில் ஆண்டுக்கு 2 டி.எம்.சி நீர் எடுத்து விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் மூலம், நீரை விநியோகிக்க அதிக ஆற்றல் தேவையாகிறது. ஏனெனில், அங்கிருந்து தண்ணீரை கருவலூர் மற்றும் அதற்கு மேல் உள்ள மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே, இதற்கு அதிக மின்னாற்றல் தேவை.

ஆனால், பவானி ஆற்றில் இருந்து 1 டி.எம்.சி நீரையும்,  எடுக்கும் போது காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து 1 டி.எம்.சி நீரையும் எடுத்து விநியோகம் செய்யும் போது, மேடான பகுதிகளுக்கு, பவானி ஆற்றில் இருந்து கிடக்கும் 1 டி.எம்.சி நீரை விநியோகிக்க முடியும். இதனால் மின்சாரம் சேமிக்கப்படும்.

நீர் முன்னதாகவே எடுக்கப்படும் போது சுத்தமானதாகவும் கிடைக்கும். இரண்டு இடங்களில் நீர் எடுப்பதால், குடிநீர் விநியோகம் எந்த பகுதிக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும்.

இந்த மாற்றம் தொடர்பாக அரசுத் துறைகளுக்கு மனு அளித்தோம். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...