தலித் என்பதால் சமைக்க விடாத அவலம்: நான்கு பேர் கைது

திருப்பூர்: தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருப்பூரில் பெண் ஒருவரை பள்ளியில் சமையல் செய்ய அனுமதிக்காதது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருப்பூரில் பெண் ஒருவரை பள்ளியில் சமையல் செய்ய அனுமதிக்காதது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவிநாசியை அடுத்த திருமலைக் கவுண்டன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் தலித் என்பதால், பள்ளியில் அவர் சமையல் செய்யக்கூடாது என்று ஒரு சாதி பிரிவினர் கடந்த 18-ம் தேதி பள்ளியில் நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, உள்ளூர் ஆதிக்க சாதியினரின் மிரட்டலுக்கு அடிபணிந்த அவினாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சமையலர் பாப்பாளை வேறு ஊருக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால், தான் இதே பள்ளியில் தான் பணியாற்றுவேன் என்று பாப்பாள் கூறினார்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி ஆகியோருக்கு தேசிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சம்மன் அனுப்பியது.

அவர்கள் மூவரையும் வரும் 30-ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைமையகத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணை தலைவர் முருகன் முன் நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சமையலர் பாப்பாளிடம் சாதிய அடக்கு முறை செய்த 12 பேர் மற்றும் அடையாளம் தெரியக்கூடிய வகையில் உள்ள 75 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இதில், கந்தசாமி (47), மூர்த்தி (27), பழனிச்சாமி (39), மூர்த்தி (47) ஆகிய நான்கு பேரை சேயூர் போலீசார் இன்று கைது செய்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...