நூறு நாள் வேலை திட்டம்: முறையாக செயல்படுத்த கோரி கோவையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டம் கடந்த 7 மாதங்களாக செயல் படாமல் உள்ளதாகவும், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பணத்தை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கட்டிடம் கட்ட சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக அரசு அறிவித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும், கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...