கோவையில் தள்ளாடியபடி வாகனம் ஓட்டிய காவலர் : மடக்கிப் பிடித்த பொதுமக்கள் - வீடியோ

கோவை: கோவையில் குடிபோதையில் சீருடையுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை: கோவையில் குடிபோதையில் சீருடையுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை செல்வபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட, ஹவுசிங் யூனிட் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு காவலர் ஒருவர், குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டியுள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை விரட்டிப்பிடித்தனர். பின்னர், அங்கிருந்த சிலர், "ஒரு போலீஸ் இப்படி பண்ணலாமா…? நாங்க ஹெல்மெட் போடமா வந்தா மட்டும் பிரச்சினை, நீங்க மட்டும் தண்ணி போட்டுட்டு வண்டி ஓட்டினா தப்பில்லையா? என அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டனர்.

ஆனால், பொதுமக்களின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லும் நிலையில் அந்த காவலர் இல்லை. அப்படியே தள்ளாடியபடி வண்டியை விட்டு இறங்கி நிற்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்த காவலரின் பெயர் வினோத் என்பதும் தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பாக அந்த பொதுமக்கள் செல்வபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அந்த காவலருக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் சார்ஜ் சீட் (Drink and Drive) போட்ட செல்வபுரம் போலீசார், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...