மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்

கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் புகழ் மிக்க வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெறும். அதே போல் இந்தாண்டு 27-ம் ஆண்டு குண்டம் திருவிழா நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதனையடுத்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது. ஆடிக் குண்டத்தை முன்னிட்டு 22-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதற்காக அமைக்கப்பட்ட 36 அடி நீலம், 1 1/2 அகலம் கொண்ட குண்டம் அமைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. குண்டம் அருகில் பொங்கல் வைக்கப்பட்டு சிம்ம வாகனத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் பூ பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு குண்டம் இறங்கும் இடத்தை அடைந்தது. அதன் பின்னர் தலைமை பூசாரி குண்டத்தை சிறப்பு பூஜை செய்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.



அவரைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். திருவிழாவை முன்னிட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில் ஊர்காவல்படை உட்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...