கோவையில் விஷ வாயு தாக்கி துப்புரவு பணியாளர் பலி : கண்களில் கருப்பு துணி கட்டி நிவாரணம் கோரிய குடும்பத்தினர்

கோவை: கோவையில் துப்புரவு பணியாளர் மகேந்திரன் விஷ வாயு தாக்கி பலியான விபத்தில் ரூ.10 லட்சம் நிவாரணம் வேண்டி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.


கோவை: கோவையில் துப்புரவு பணியாளர் மகேந்திரன் விஷ வாயு தாக்கி பலியான விபத்தில் ரூ.10 லட்சம் நிவாரணம் வேண்டி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். 



கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த இவர், தனியாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி காந்திபுரம் பகுதியிலுள்ள மாணிக்கவாசகம் என்பவரது வீட்டில் துப்புரவு பணிக்காக சென்றார். அப்போது கழிவு நீர்த் தொட்டியை திறந்து சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்தார். 

இந்த சூழலில், பலியான மகேந்திரனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். மேலும், ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அதில், மகேந்திரன் உயிரிழப்புக்கு நிவாரணமாக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...