நீலகிரியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்; ஊதா நிறமாக காட்சியளிக்கும் மலைப் பகுதிகள்

நீலகிரி: குறிஞ்சி நிலமான நீலகிரி பகுதிகளின் பல சிறப்புகளில் குறிஞ்சி மலர்களும் ஒன்று.

நீலகிரி: குறிஞ்சி நிலமான நீலகிரி பகுதிகளின் பல சிறப்புகளில் குறிஞ்சி மலர்களும் ஒன்று.

மணி வடிவில் நீல நிறத்தில் உள்ள இம்மலர்கள் நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான மலைகளின் இயற்கையாகவே வளர்ந்துள்ள ஒரு தாவரமாகும். ஸ்ட்ரோ பிலாந்தஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இத்தாவரம் ஓராண்டு இடைவெளி முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்க கூடியது.



ஆசிய கண்டத்தில் 150 வகை குறிஞ்சியும், இந்தியாவில் 150 வகை குறிஞ்சியும், உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் நீலகிரியில் மட்டும் 30 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன. 

நீலகிரியில் தற்போது கோத்தகிரியை அடுத்த ரங்கசாமி மலைச் சரிவுகளில் குறிஞ்சி மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது. இக்கால கட்டத்தில் இம்மலர்களில் தேன் அதிகமாக இருப்பதால் தேனீக்கள் இதனைச் சேகரிக்க தொடங்கும். 



அதே வேளையில் பழங்குடியின மக்களான இருளர் மற்றும் குரும்பர் இன மக்கள் தேனீக்கள் கூட்டிலிருந்து தேன் சேகரிப்பில் ஈடுபடுவர். உதகையிலிருந்து சுமார் 45 கி.மீ பயணித்தால் இந்த மலைப் பகுதியை அடையலாம். 

ஆனால், அங்கு செல்ல வனத்துறையினரின் அனுமதி பெற வேண்டும். தற்போது பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்க கூடிய வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...